ராணா தம்பியை தொடர்ந்து பிரபல இயக்குனர்: ஸ்ரீலீக்ஸ் சர்ச்சை

Report Print Kavitha in பொழுதுபோக்கு

தெலுங்கு பட உலகின் பிரபல இயக்குநர் ஒருவரும் ஸ்ரீலீக்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தெலுங்கு பட உலகில் நடிகைகளை அங்குள்ள நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுப்படுவதாக நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

அதுமட்டுமின்றி இவர் தெலுங்கு இயக்குநர் ஒருவரின் முகத்தை தோலுறித்துக் காட்டுவதாகவும், அவரது புகைப்படத்தை வெளியிடுவேன் எனக் கூறி ஸ்ரீரெட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் ராணாவின் தம்பியை அடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்த தெலுங்கில் முன்னணி இயக்குனரான கோனா வெங்கட் தன்னிடம் ஆபாசமாக பேசியதாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள இயக்குனர் கோனா வெங்கட் கூறியதாவது,

நடிகை ஒருவர் சினிமா உலகில் உள்ள பல பிரபலங்களை பற்றியும், என்னைப் பற்றியும் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் அதிர்ச்சியை அளிக்கிறது.

இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு, போலீஸ் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். உண்மை நிச்சயம் வெளியாகும். என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை நான் சட்டப்படி சந்திப்பேன்' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers