மான் வேட்டை வழக்கில் சிறை செல்லும் சல்மான்கானின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு
174Shares

திரைப்பட கதை ஆசிரியர் சலிம் கான் மற்றும் அவரது முதல் மனைவி சுஷிலா ஷாரக்கிற்குப் பிறந்தவர் தான் மான் வேட்டை வழக்கில் சிக்கி 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற நடிகர் சல்மான் கான்.

1988-ம் ஆண்டுப் பிபி ஹோ தோ ஐசி என்ற திரைப்படம் மூலம் நடிக்க வந்த இவர் இந்தியாவின் மிகப் பெரிய வசூல் மன்னர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

2011-ம் ஆண்டுச் சொந்தமாக சல்மான் கான் பீயிங் ஹூயூமன் ப்ரோடக்‌ஷன் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தினைத் துவங்கி அதன் மூலம் கிடைக்கும் லாபத்தினைப் பீயிங் ஹூயூமன் என்ற தொண்டு நிறுவனத்திற்கு அளித்து வருகிறார்.

இந்தியா மற்றும் அரபு நாடுகளில் மிகவும் பிரபலமான பாலிவுட் நடிகராக வலம் வரும் சல்மான் கானின் சொத்து மதிப்பு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 140 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சல்மான் கானின் தற்போதைய சொத்து மதிப்பு 1,950 கோடி ரூபாய் எனவும், ஆண்டு வருமானம் 140 கோடி ரூபாய் எனவும் கூறப்படுகிறது.

மேலும் மெர்சிடஸ், பென்ட்லி, ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் ஆடி என 8 ஆடம்பர கார்களைச் சல்மான் கான் பயன்படுத்தி வருகிறார். இதன் மதிப்பு 14 கோடி ரூபாய் வரை இருக்கும்.

ஒரு திரைப்படத்திற்கு சலமான் பெறும் ஊதியம் ரூ.38 கோடி. வங்கி சேமிப்பில் 4 கோடி ரூபாய் வைத்துள்ளார். வருமான வரியாக மட்டும் ஆண்டுக்கு சுமார் 12 கோடி செலுத்தி வருகிறார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்