பாலிவுட் நடிகர் கமால் ரஷீத், தனக்கு வயிற்றில் புற்றுநோய் இருப்பதால், இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகள் மட்டுமே உயிர்வாழ்வேன் என்ற தகவலை வெளியிட்டு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
எனக்கு 2 ஆசைகள் உள்ளது, அதனை நிறைவேற்றாமல் இறந்துவிடுவேனோ என்பதுதான். ஏ கிரேடு படமொன்றைத் தயாரிக்க வேண்டும்.
அமிதாப்பச்சனை வைத்து படமொன்றை இயக்க வேண்டும் இல்லை அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும். இந்த இரண்டு ஆசைகளும் என்னுடன் சேர்ந்து இறந்து விடுமோ என்று கவலையாக இருக்கிறது.
மேலும், எனக்கு யாருடைய பரிதாபமும் தேவையில்லை. முன்பு போலவே என்னை வெறுக்கும், விரும்பும் நபர்களை நான் பாராட்டுவேன் என்று பதிவிட்டுள்ளார்.
This is press release of #KRK about his health. pic.twitter.com/0UlscVD4wq
— KRKBOXOFFICE (@KRKBoxOffice) April 3, 2018