நடிகர் கொல்லம் அஜித் மரணம்: திரையுலகினர் நேரில் அஞ்சலி

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
115Shares

பிரபல மலையாள திரைப்பட நடிகர் கொல்லம் அஜித் இன்று தனது 56-வது வயதில் காலமானார்.

மலையாள திரையுலகில் 90-களில் பிரபலமான வில்லன் நடிகராக திகழ்ந்தவர் கொல்லம் அஜித்.

இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் 500 படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக வயிற்று வலி பிரச்சனையால் அவதிப்பட்டிருந்த அஜித் இதற்காக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.40 மணிக்கு அஜித் மரணமடைந்தார்.

அவரின் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்