வித்தியாசமான தோற்றத்தில் இந்தி சூப்பர் ஸ்டாரின் புகைப்படம்!

Report Print Kabilan in பொழுதுபோக்கு

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி படத்திற்காக, நடிகர் அமிதாப்பச்சன் மாற்றியுள்ள தோற்றம் இணைய தளத்தில் வைரலாகியுள்ளது.

ஹிந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், முதன் முறையாக ‘சைரா’ எனும் தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில், நயன்தாரா, விஜய்சேதுபதி போன்ற முன்னணி நடிகர்களும் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இந்த படத்திற்காக அமிதாப் பச்சன் தனது தோற்றத்தை மாற்றியுள்ளார். அவருடைய தோற்றம் எப்படி இருக்கும் என்று ஒரு புகைப்படத்தை, தனது இணைய தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

அதில் ரவீந்திரநாத் தாகூர் போன்ற வயதான தோற்றத்தில் தாடி, மீசையுடன் காணப்படுகிறார். இது குறித்து அமிதாப் பச்சன் கூறுகையில், ‘அன்பு நண்பர் சிரஞ்சீவி, ஆந்திராவில் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்.

அவருடைய பிரம்மாண்ட படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க என்னை அழைத்தார். மிகவும் வீரமான கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். அதில் நானும் நடிக்க சம்மதித்தேன். ஐதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது.

அதற்கான எனது வேடத்தின் மாதிரி தோற்றம் தான் இது. இறுதியான தோற்றம் அல்ல. என்றாலும், ஏறக்குறைய இப்படித்தான் இந்த படத்தில் எனது வேடம் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers