நயன்தாரா குறித்து மனம் திறந்த விக்னேஷ் சிவன்

Report Print Printha in பொழுதுபோக்கு

தமிழ் திரையுலகில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபம் நடிகை நயன்தாராவும், திரைப்பட இயக்குநர், பாடலாசிரியர் மற்றும் நடிகர் என பன்முகம் கொண்ட விக்னேஷ் சிவனும் நீண்ட நாட்களாக காதலிப்பதாக தகவல்கள் வெளியானது.

இவர்கள் இருவருமே வெளிநாடுகளுக்கு ஜோடியாக செல்வதுடன், டுவிட்டரில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை கூட பகிர்ந்து கொண்டார்கள்.

இதனால், இருவரும் காதலிக்கிறார்கள் என்று கூறினாலும் இது குறித்து நயன்தாராவோ அல்லது விக்னேஷ் சிவனோ எவ்வித பதிலையும் தெரிவிக்கவில்லை.

சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நயன்தாரா, நான் விருது பெறுவதற்கு காரணமாக இருந்த பெற்றோர், சகோதரர், வருங்கால கணவர் ஆகியோருக்கு நன்றி என்று கூறியதன் மூலம் விக்னேஷ் சிவனை காதலிப்பதை வெளிப்படையாக தெரிவித்தார்.

அதனால் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், டி.வி. இசை நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்ட விக்னேஷ் சிவன், நயன்தாரா எனக்கு மிகவும் பிடித்தமான நடிகை.

அதற்கெல்லாம் மேலாக எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்ட இரும்பு பெண்மணி.

இதன் காரணமாக அவரை எனக்கு அதிகமாக பிடிக்கும். அந்த வகையில் நான் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டதாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers