கோஹ்லி மனைவி அனுஷ்கா ஷர்மாவுக்கு கிடைத்த கௌரவம்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

பிரபலமான போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள, 30 வயதுக்குள் மாற்றத்தை உருவாக்கியவர்கள் பட்டியலில் நடிகை அனுஷ்கா ஷர்மா இடம் பிடித்துள்ளார்.

புகழ்பெற்ற பத்திரிக்கையான போர்ப்ஸ், 30 வயதிற்குள் மாற்றத்தை உருவாக்கியவர்கள், இளம் கண்டுபிடிப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள் என 30 பேர் கொண்ட பட்டியலை, ஆசிய அளவில் தயார் செய்து வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவும் இடம்பிடித்துள்ளார்.

இது குறித்து போர்ப்ஸ் பத்திரிக்கை கூறுகையில், ’அனுஷ்கா ஷர்மா மாடலிங் பெண்ணாக இருந்து குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியையும், மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வரும் அனுஷ்கா ஷர்மாவின் Market value, விராட் கோஹ்லியை திருமணம் செய்து கொண்ட பிறகு உயர்ந்துள்ளது.

மேலும், கோஹ்லியின் வெற்றியில் அனுஷ்கா ஷர்மாவுக்கு பெரும் பங்கு உள்ளது’ என தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு கோஹ்லி - அனுஷ்காவின் திருமண புகைப்படம் கோல்டன் ட்வீட்டாக சிறப்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers