நிறைமாத கர்ப்பிணியின் டான்ஸிங்: மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ

Report Print Kavitha in பொழுதுபோக்கு

அமெரிக்காவின் ஃப்ளோரிடா நகரத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான ஆலிசான் ஸ்பஸ் என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட “போல் டான்ஸிங்” ( Poll dancing) ஆடிய வீடியோ தற்போது சமூக வளைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

9 மாத கர்ப்பிணியான ஆலிசான், தொழில்முறை நடனக் கலைஞர். ஆர்லாண்டோவில் உடற்பயிற்சி மற்றும் நடனம் பயிற்றுவிப்பாளராகப் பணிபுரிகிறார்.

இவர் போல் டான்சிங் ஆடுவதில் கைதேர்ந்த கலைஞரானவர்.

சமீபத்தில் இவர் தன் இன்ஸ்டாகிராமில் அவர் நடன வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் இது சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ பார்த்தவர்கள் ‘நிறைமாத கர்ப்பிணியான ஆலிசானால் இவ்வளவு நளினமாக எப்படி நடனம் ஆட முடிகிறது’ என்றும் ஒரு சிலர், இது மிகவும் ஆபத்தான முயற்சி. வயிற்றில் வளரும் சிசுவுக்கு இதனால் பாதிப்பு ஏற்படும்’ என்று பயத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதுமட்டுமின்றி ஆலிசான் இதுபற்றி கூறுவதாவது, நான் இப்போது 9 மாத கர்ப்பிணி. என்னுடைய உடல் தோற்றம் முற்றிலுமாக மாறியுள்ளது.

ஆனாலும் நான் தினமும் மேற்கொள்ளும் ஃபிட்னஸ் பயிற்சிகளை நிறுத்தவில்லை, போல் நடனத்தைத் தினமும் உடற்பயிற்சிபோல செய்துவருகிறேன்’ என்று சாதாரணமாக கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers