கௌதம் வாசுதேவ் மேனன் மீது புகார்: பரபரப்பை ஏற்படுத்திய இளம் இயக்குநர்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநர் கௌதம் மேனனை விமர்சிக்கும் விதமாக, இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் பதிவிட்டுள்ள ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

’துருவங்கள் 16’ எனும் வெற்றிப் படத்தின் மூலமாக, இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இவர் தற்போது, இயக்குநர் கௌதம் மேனன் தயாரிப்பில் ‘நரகாசூரன்’ எனும் படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், கார்த்திக் நரேன் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், ‘சில நேரங்களில் தவறான நம்பிக்கை உங்களைக் கொன்றுவிடும். ஒருவர் மீது நம்பிக்கை வைப்பதற்கு முன், ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தியுங்கள்.

அப்படி தவறான நம்பிக்கை வைத்தால், உங்கள் கனவு எல்லாத் திசைகளில் இருந்தும் சிதைந்து போவதை நீங்கள் காண நேரிடும்’ என தெரிவித்திருந்தார்.

ஆனால், இவர் யாரை குறிப்பிட்டு இந்த ட்வீட்டை பதிவிட்டார் என்று தெரியாமல் இருந்தது. இந்நிலையில், கௌதம் மேனன் ஒரு வீடியோவை பாராட்டி ட்வீட் செய்திருந்தார்.

அதனைக் குறிப்பிட்டு மேலும் ஒரு ட்விட்டர் பதிவை கார்த்திக் நரேன் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், ‘பலர் என்னிடம் அறிவுரை கூறினாலும் நான் உங்களை நம்பினேன். ஆனால், என்னை நீங்கள் குப்பை போல நடத்தினீர்கள்.

கடைசியில் நாங்களே முதலீடு செய்ய வேண்டியதாகிவிட்டது. தயவு செய்து இனி யாரையும் இப்படி ஏமாற்றாதீர்கள்’ என தெரிவித்துள்ளார்.

கார்த்திக் நரேனின் இந்த பதிவு, திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், கௌதம் மேனன் இது குறித்து எதுவும் பதில் தெரிவிக்கவில்லை.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers