15 நிமிடம் நடனம் ஆடுவதற்கு ரூ.5 கோடி வாங்கும் பிரபல நடிகர்

Report Print Printha in பொழுதுபோக்கு

பிரபல ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங் 2010-ல் பேன்ட் சர்மா பாராத் என்ற படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார்.

இவர் பாமே டாக்கீஸ், ராம்லீலா, லூதெரா, கில் தில், பஜிரோ மஸ்தானி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

ஹிந்தியில் இவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இவருக்கும் ஹிந்தி நடிகை தீபிகா படுகோனேவுக்கும் ஏற்பட்ட காதலால் விரைவில் இவர்கள் திருமணம் செய்துக் கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் அடுத்த ஏப்ரல் மாதத்தில் நடக்க உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடக்க விழா நிகழ்ச்சியில் ரன்வீர் சிங்கை சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்ள அழைத்துள்ளனர்.

அதில் 15 நிமிடங்கள் அவர் நடனம் ஆடுவதற்காக ரூ.5 கோடி சம்பளம் பேசப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers