நிர்வாணமாக நடிக்க தயார்: பிரபல நடிகையின் வெளிப்படை பேச்சு

Report Print Printha in பொழுதுபோக்கு
438Shares
438Shares
lankasrimarket.com

பின்னணிப் பாடகி, நடிகை என பன்முக திறமை கொண்ட பிரபல நடிகை ஆண்ட்ரியா தைரியமானவர் என்பது சினிமா ரசிகர்கள் அனைவருக்குமே தெரிந்த ஒன்று.

இவர் எப்போதுமே வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பார், அதனாலேயே சினிமாவில் அவரது நடிப்புக்கு நிறைய பாராட்டுகள் கிடைக்கும்.

சமீபத்தில் ஆண்ட்ரியா மகளிர் தினம் தொடர்பாக சென்னையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

அப்போது அவர், சினிமாவில் பெண்களுக்கு இன்னும் முன்னுரிமை அளிக்கப்படவில்லை, ஆணாதிக்கம் நிறைந்ததாகவே காணப்படுகிறது.

ஒரு நடிகையின் திறமை அவர் எந்த ஹீரோவுடன் நடிக்கிறார் என்பதை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.

தரமணி படத்திற்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தது, ஆனால் அதன் பிறகு ஒரு பட வாய்ப்பு கூட கிடைக்கவில்லை.

கவர்ச்சியாக ஆடை அணிந்து நடிப்பதால் மட்டும் மகிழ்ச்சியடைந்து விடுவேன் என எதிர்பார்க்காதீர்கள், ஒருபோதும் எனக்கு அது மகிழ்ச்சியை தராது.

திரையில் நான் நிர்வாணமாக நடிக்க கூட தயார், ஆனால் அந்த கதையில் அக்காட்சி மிகவும் அவசியமானதாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

ஆண்ட்ரியாவின் இந்த தைரியமான பேச்சு ரசிகர்கள் பலரையும் கவர்ந்துள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்