ஓடும் காரில் பாலியல் தொல்லை? விளக்கம் அளித்த நடிகை

Report Print Kavitha in பொழுதுபோக்கு
163Shares
163Shares
lankasrimarket.com

சென்னையில் வாடகை காரில் பயணித்த போது பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வெளியான தகவலுக்கு நடிகை பார்வதி நாயர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

என்னை அறிந்தால், உத்தம வில்லன், எங்கிட்ட மோதாதே, நிமிர் ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர் மலையாள நடிகை பார்வதி நாயர்.

சென்னையில் வாடகை காரில் பயணித்தபோது, பாலியல் தொல்லைக்கு ஆளானதாக தகவல்கள் வெளியானது.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பார்வதி, எனக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டது என்பது தவறான செய்தி, டிரைவர் மரியாதை இல்லாமல் அநாகரிகமாக நடந்து கொண்டார்.

ஜி.பி.எஸ். தவறாக காட்டியதால் தவறான வழியில் சென்றார், அவர் என்னிடம் தவறாக நடக்கவில்லை, எனவே வதந்தியை பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்