அம்மா ஸ்ரீதேவி போல் உடை அணிந்த மகள் ஜான்வி: வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in பொழுதுபோக்கு

ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி அவர் போன்று சேலை உடுத்தியிருப்பது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் அவரது குடும்பத்தினருக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக மூத்த மகளான ஜான்வி, அம்மாவின் பிரிவை தாங்க முடியாமல் தவித்து வருகிறார்.

சமீபத்தில் கூட தன்னுடைய பிறந்தநாளை முதியோர் இல்லத்தில் கொண்டாடினார். அதன் பின் நான் சந்தோஷமாகவே இல்லை என்று இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவை பதிவேற்றம் செய்தார்.

இந்நிலையில் ஜான்வி tதன்னுடைய முதல் படமான தடக் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது தான் ஸ்ரீதேவி மரணமடைந்தார். மகளின் முதல் படத்தை பார்க்காமலே அவர் இறந்துவிட்டார்.

இதையடுத்து தற்போது மீண்டும் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதில் ஜான்வியும் நடிக்க துவங்கியுள்ளார். அப்போது இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் நடித்த போது ஸ்ரீதேவி எப்படி சேலை அணிந்திருந்தாரோ அதே போன்ற சேலையை அணிந்து படத்தில் நடித்துள்ளார்.

தற்போது இந்த புகைப்படம் இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற ஹேஷ்டெக்குடன் டுவிட்டர் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers