கோலாகலமாக நடந்தது நடிகர் பார்த்திபனின் மகள் திருமணம்

Report Print Printha in பொழுதுபோக்கு

திரைப்பட நடிகர், இயக்குனர், தமிழ் எழுத்தாளர் என பன்முகம் கொண்ட நடிகர் பார்த்திபன்- சீதா அவர்களின் மகள் கீர்த்தனாவிற்கு இன்று கோலாகலமாக திருமணம் நடந்தது.

நடிகர் பார்த்திபன் மகள் கீர்த்தனாவிற்கும், பிரபல ஒளிப்பதிவாளர் ஸ்ரீகர் பிரசாத் மகன் அக்‌ஷய்க்கும் காதல் மலர்ந்த நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்தை பெற்றனர்.

சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்து, மகளிர் தினமான இன்று சென்னையில் அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடந்தது.

இந்நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers