சாதிக் கலவரத்தை தூண்டுகிறார்: நடிகை கஸ்தூரி மீது புகார்

Report Print Printha in பொழுதுபோக்கு

நடிகை கஸ்தூரி ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யும் கருத்து சாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளதாக கூறி அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பிரபல சமூக வலைத்தலமான ட்விட்டரில் ஆர்வத்துடன் கருத்துக்களை பதிவு செய்து வரும் நடிகை கஸ்தூரி, சமீப காலமாக சினிமா, அரசியல் குறித்து தொடர்ச்சியாக பல கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

ஆனால் அவரின் கருத்திற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு இரண்டுமே சரிசமமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த மாதம் இறுதியில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த வெள்ளம்புத்தூர் கிராமத்தில் 22-திகதி நடந்த படுகொலை தொடர்பாக கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றினை பதிவிட்டு இருந்தார்.

அதில் கொலைக்கும்பலை குறித்து ஒரு குறிப்பிட்ட சமூகம் குறித்து கூறுவது போல கருத்தை போட்டிருந்தார்.

பின் அது எழுத்துப் பிழையாகி விட்டது என்று, அந்த பதிவினை நீக்கி அது தொடர்பாக மறு பதிவையும் போட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரியின் பதிவு சாதிக்கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது என்று அவர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்