ஆஸ்கர் மேடையில் இளம் திருநங்கை முதல் முறையாக செய்த செயல்: வைரல் வீடியோ

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

ஆஸ்கர் விழா மேடையில் வெளிப்படையாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய முதல் திருநங்கை தொகுப்பாளர் என்ற சாதனையை நடிகை டேனிலா விகா படைத்துள்ளார்.

அமெரிக்காவில் 90வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் 28 வயதான திருநங்கை நடிகை டேனிலா விகா, தொகுப்பாளினியாக இருந்து பிரபல இசைக் கலைஞர்களான சர்ப்ஜன் ஸ்டீவன்ஸ் மற்றும் செண்ட் விண்செண்ட் ஆகியோரை இசை நிகழ்ச்சி நடத்த மேடைக்கு அழைத்தார்.

இதன் மூலம் ஆஸ்கர் வரலாற்றில் முதல் வெளிப்படையான திருநங்கை தொகுப்பாளர் என்ற சாதனையை டேனிலா படைத்தார்.

சிலியை சேர்ந்த டேனிலா தனது 17 வயதில் திருநங்கையாக மாற தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்