ஸ்ரீதேவியின் உடன்பிறந்த தங்கை யார் தெரியுமா? பலருக்கும் தெரியாத தகவல்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

நடிகை ஸ்ரீதேவி தமிழ்நாட்டில் பிறந்த தமிழச்சி ஆவார். அவரின் இளைய தங்கை ஸ்ரீலதா குறித்து பலருக்கும் தெரியாமல் இருக்கலாம்.

ஸ்ரீதேவியின் கடைசி காலங்களில், ஸ்ரீலதாவுடனான உறவு அவ்வளவு மெச்சும்படி இல்லை.

ஸ்ரீதேவியும், ஸ்ரீலதாவும் தாய் ராஜேஷ்வரிக்கு பிறந்த நிலையில் ஸ்ரீதேவி தனது நான்காவது வயதிலேயே திரையுலகில் நுழைந்தார்.

கடந்த 1972லிருந்து 1993 வரையிலான காலக்கட்டத்தில் ஸ்ரீதேவி செல்லும் படப்பிடிப்புகளுக்கு அவருக்கு உதவியாக செல்வதை ஸ்ரீலதா வழக்கமாக கொண்டிருந்தார்.

Credit:Instagram

ஸ்ரீதேவியை அன்பாக பார்த்து கொண்டதுடன் அவரை வீடியோவும் எடுத்துள்ளார் ஸ்ரீலதா.

பின்னர் கடந்த 1989-ல் கிரிக்கெட் வீரர் சஞ்சய் ராமசாமியை ஸ்ரீலதா திருமணம் செய்த நிலையில் ஸ்ரீதேவியுடனான உறவில் அவருக்கு விரிசல் விழுந்தது.

அந்த சமயத்தில் அவர்களின் பெற்றோர் இறந்துவிட சொத்து பிரச்சனை வெடித்தது.

இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் ஸ்ரீலதாவுக்கு, ஸ்ரீதேவி அதிகளவில் பணம் தரவேண்டியிருந்தது.

Credit: Getty

இதன் பின்னர் இருவரும் அதிகம் பேசி கொள்ளவில்லையாம்.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் மரண செய்தி ஸ்ரீலதாவை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Credit: Getty

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்