இந்நாள் வரும் என்று என் தந்தை அன்றே கூறினார்: காயத்ரி ரகுராம்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

நடிகர் கமல்ஹாசன், அரசியல் தலைவராக வருவார் என தனது தந்தை கூறியதாக, நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நேற்று மதுரையில் நடந்த கூட்டத்தில், தனது கட்சியின் பெயரை அறிவித்து தனது அரசியல் பிரவேசத்தை தொடங்கினார் கமல்ஹாசன்.

இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கமல் சாரை பார்த்து என் தந்தை பெருமைப்படுவார். நான் முழுவதுமாக பெருமைப்படுகிறேன். நான் சிறு வயதில் இருந்தே அவரை நல்ல தலைவராக பார்க்கிறேன்.

கமல் அரசியல்வாதியாகும் நாள் பற்றி என் தந்தை பேசியிருக்கிறார். அவர் நல்ல தலைவராக இருப்பார். அவர் பெரிய பொறுப்பேற்றுள்ளார். அவருக்காக எப்பொழுதும் பிரார்த்தனை செய்வோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும், பிரார்த்தனை செய்வதற்கு பதில், நாம் அவர் பக்கம் நின்று அவரை ஆதரிக்க வேண்டும். பெருமைப்பட்டால் அவருடன் சேர வேண்டியது தானே? என்று ஒருவர் காயத்ரியிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, ‘கண்மூடித்தனமாக பின்பற்றுவது, அவர் பக்கம் இருப்பது என்று இல்லை. அவர் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். பிற கட்சிகளை விட வலுவாக இருக்க வேண்டும்.

அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும். இது எளிது அல்ல என்பது எனக்கு தெரியும்’ என காயத்ரி பதில் அளித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers