இரண்டாவது திருமணம் செய்த பாளையத்து அம்மன் நடிகை

Report Print Kabilan in பொழுதுபோக்கு

மலையாளம் மற்றும் தமிழ்பட நடிகை திவ்யா உன்னி, அமெரிக்காவில் பொறியாளர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

பாளையத்து அம்மன், சபாஷ், கண்ணன் வருவான் என ஒரு சில தமிழ் படங்களில் நடித்த நடிகை திவ்யா உன்னி. மலையாள நடிகையான இவர், மும்பையைச் சேர்ந்த பொறியாளரான அருண்குமார் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

இவர்களின் திருமணம், அமெரிக்காவின் Houston நகரில் உள்ள குருவாயூரப்பன் கோயிலில் நேற்று நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான், தனது முதல் கணவரான சுதிர் ஷேகராவை, திவ்யா உன்னி பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்