இதற்காக ரசிகர்கள் என்னை நேசிக்கவில்லை: வெற்றிக்கான காரணத்தை கூறிய நடிகை ஓவியா

Report Print Santhan in பொழுதுபோக்கு

திரைப்பட நடிகையான ஓவியா பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அந்த நிகழ்ச்சியில் அவரின் செயல்பாடுகள் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்திருந்தது.

இருப்பினும் மன அழுத்ததின் காரணமாக அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினாலும், அவரை ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பின் பற்றி வருகின்றனர்.

அதில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் ஓவியா அவ்வப்போது பதில் அளித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஓவியா லவ் பற்றி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், நான் வெற்றிகரமாக இருப்பதால் என் ரசிகர்கள் என்னை நேசிக்கவில்லை. என் ரசிகர்கள் என்னை நேசிப்பதால்தான், நான் வெற்றிகரமாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்