நடிகை பானுப்ரியாவின் முன்னாள் கணவர் மரணம்

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு
2193Shares
2193Shares
ibctamil.com

தமிழ் திரைப்படங்களின் முன்னணி கதாநாயகர்களாக வலம் வந்த ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்டவர்களுடன் நாயகியாக நடித்த பானுப்ரியாவின் முன்னாள் கணவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் கடந்த 1990-ஆம் ஆண்டுகளில் கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை பானுப்ரியா.

இவர் கடந்த 1998 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஆதர்ஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 2003 ஆம் ஆண்டு அபிநயா என்ற பெண் குழந்தையும் பிறந்தது. இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2005 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்ட நிலையில், பானுப்ரியா சென்னை திரும்பினார்.

இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த ஆதர்ஷ், கடந்த 20 ஆம் திகதி மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்