நடிகை தமன்னா மீது செருப்பு வீசியது ஏன்? இளைஞர் வாக்குமூலம்

Report Print Kabilan in பொழுதுபோக்கு
185Shares
185Shares
ibctamil.com

ஹைதராபாத்தில் கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகை தமன்னா மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நகைக்கடை ஒன்றை திறந்து வைக்கும் விழாவுக்கு சென்றுள்ளார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற தமன்னா, நகைக்கடையை விட்டு வெளியே வந்த போது கூட்டத்தில் நின்றிருந்த நபர் ஒருவர், தமன்னா மீது செருப்பை வீசியுள்ளார். ஆனால், அது தமன்னா மீது படாமல் அருகில் நின்றிருந்த ஊழியரின் மீது விழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்நபரைப் பிடித்து விசாரித்தனர். இதில் அவரின் பெயர் கரிமுல்லா என்பதும், அவர் முசீராபாத்தைச் சேர்ந்த பொறியாளர் என்பது தெரியவந்தது.

மேலும், சமீபகாலமாக நடிகை தமன்னா நடிக்கும் கதாபாத்திரங்கள், தனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும், அதன் காரணமாகவே தான் இப்படி செய்ததாகவும் கரிமுல்லா பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்