பிரபல நடிகர் கார் விபத்தில் படுகாயம்

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நானி கார் விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.

தமிழில் நான் ஈ, ஆஹா கல்யாணம் படங்களில் நடித்து பிரபலமானவர் நானி, தற்போது தயாரிப்பாளராக களமிறங்கியுள்ள நானி அவ் படத்தை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் காரில் பயணித்துக் கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் நானியின் முகம் மற்றும் மூக்கில் அடிபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நானியின் உடல்நலம் குறித்து ரசிகர்கள் டுவிட்டரில் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் நலமாக இருப்பதாகவும், விரைவில் நடிக்கத் தொடங்கி விடுவேன் எனவும் டுவிட்டரில் அவரே தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்