இணையதளத்தில் ஆபாச படம் வெளியிட்ட ராம்கோபால் வர்மா

Report Print Kabilan in பொழுதுபோக்கு

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா, ‘God, Sex and Truth’ என்னும் ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்டதாக, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குள்ளான கருத்துக்களை தெரிவித்து, அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்துபவர் ராம்கோபால் வர்மா.

இவர், ‘God, Sex and Truth’ என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார். இதில் அமெரிக்காவின் பிரபல ஆபாச பட நடிகையான மியா மல்கோவா நடித்துள்ளார்.

இந்த குறும்படம் இன்று இணையதளத்தில் வெளியாகியது. முன்னதாக, இந்த படத்தின் வெளிப்படையான உள்ளடக்கம் காரணமாக, ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், ஐதராபாத்தில் சமூக ஆர்வலர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் ராம்கோபால் வர்மா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சமூக ஊடகங்களில் ராம்கோபால் வர்மா வெளியிட்ட சில புகைப்படங்கள் தொடர்பாகவும், புகார் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்