பிரியங்கா சோப்ராவுக்கு வருமான வரித்துறையின் உத்தரவு

Report Print Kabilan in பொழுதுபோக்கு

பிரபல ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, பரிசாக பெற்ற விலை உயர்ந்த கார் மற்றும் கைக்கடிகாரத்துக்கு வரி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறையினர் கடிதம் அனுப்பியுள்ளனர்.

கடந்த 2011ஆம் ஆண்டு, நடிகை பிரியங்கா சோப்ராவின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

சோதனையில், 40 லட்சம் மதிப்புள்ள எல்.வி.ம்.எச் டேக் எனும் கைக்கடிகாரம், 27 லட்சம் மதிப்புள்ள டொயேட்டா பைரஸ் எனும் கார் ஆகியவற்றிற்கு வரி செலுத்தாதது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து, கார் மற்றும் கைக்கடிகாரம் தான் சம்பாதித்து வாங்கவில்லை என்றும், அவை பரிசாக பெறப்பட்டது என்றும் பிரியங்கா சோப்ரா விளக்க அளித்தார்.

எனினும், அதற்கு வரிசெலுத்த வேண்டும் என அதிகாரிகள் கூறியதற்கு, முடியாது என மறுத்து விட்டார்.

இந்நிலையில், தற்போது அந்தப் பொருட்களுக்கு வரி செலுத்தியே ஆக வேண்டும் என வருமான வரித்துறையினர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்