தரையில் அமர்ந்து ரசிகர்களுடன் பேசிய விஜய்சேதுபதி

Report Print Kabilan in பொழுதுபோக்கு

நடிகர் விஜய்சேதுபதி, நிகழ்ச்சி ஒன்றில் தரையில் அமர்ந்து ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

விஜய்சேதுபதி, கவுதம் கார்த்திக் நடிப்பில் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ எனும் திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய்சேதுபதி, மேடையின் தரையில் அமர்ந்து ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

விஜய்சேதுபதி தரையில் அமர்ந்ததை பார்த்த அவரின் ரசிகர்கள், ’இது தான் எங்கள் மக்கள் செல்வன். தலைக்கனமோ, பந்தாவோ இல்லாதவர்’ என்று பெருமையாக தெரிவித்துள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

முன்னதாக விஜய்சேதுபதி, மாற்றுத்திறனாளி ரசிகருக்காக அவருடன் தரையில் அமர்ந்து, அவருக்கு முத்தம் கொடுத்தபடி எடுத்த Selfie புகைப்படம் வைரலானது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்