நடிகர் விமல் மீது பொலிசில் புகார்

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு

நடிகர் விமல் மீது சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விமல் நடித்துள்ள மன்னர் வகையறா படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் கணேசன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், ஜிகே ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் மன்னர் வகையறா படத்தை தயாரித்துள்ளோம்.

இப்படத்தின் நாயகனாக விமல் நடித்துள்ளார், குடியரசு தினத்தன்று இப்படம் வெளியாகவுள்ளது, இந்த அறிவிப்பில் எனது பெயர் இல்லை.

படத்துக்காக 1.75 கோடி ரூபாய் செலவழித்துள்ளேன், படம் வெளியானவுடன் 2.15 கோடி தர வேண்டும், அப்படித்தான் ஒப்பந்தத்திலும் உள்ளது.

ஆனால் என்னை ஓரங்கட்டி படத்தை வெளியிட முயற்சிக்கின்றனர், கொலை மிரட்டலும் வருகிறது.

நடிகர் விமல் உட்பட மூவர் பணத்தை தராமல் மோசடி செய்யப் பார்க்கிறார்கள், உரிய நடவடிக்கை எடுத்து என் பணத்தை மீட்டுத்தரும்படி கோரிக்கை விடுக்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்