பிரபல நடிகர் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல மலையாள நடிகரும், இயக்குனருமான சீனிவாசன் பக்கவாத நோய் காரணமாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழில் லேசா லேசா, சிறைச்சாலை உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் மலையாளத்தில் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளவர் சினிவாசன்.

பல மலையாள படங்களையும் இவர் இயக்கியுள்ளார், இந்நிலையில் சீனிவாசனுக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்ட நிலையில் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சீனிவாசன் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார், அவரின் உடல் நிலை சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்