ஐஸ்வர்யா ராய் பற்றி தோழி கூறிய சுவாரசிய தகவல்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

நடிகை ஐஸ்வர்யா ராயின் இளமை நாட்கள் குறித்த சுவாரஸ்ய தகவல்களை, அவரின் தோழி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உலக அழகி பட்டம் வென்ற நடிகை ஐஸ்வர்யா ராய், உலகம் முழுவதும் புகழ்பெற்றார். திரையுலகில் அவரைப் பற்றிய தகவல்கள் நமக்கு தெரியும். ஆனால் அவரின் கல்லூரி வாழ்க்கை குறித்த தகவல்கள் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.

இந்நிலையில், ஐஸ்வர்யா ராயுடன் கல்லூரியில் ஒன்றாக படித்த ஷிவானி என்பவர், ஐஸ்வர்யாவின் இளமை நாட்கள் குறித்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘நான் மும்பையில் உள்ள ஜெய்ஹிந்த் கல்லூரியில், அறிவியல் பிரிவில் ஓர் ஆண்டாக படித்து வந்தேன். அப்போது, KC கல்லூரியில் முதலில் சேர்ந்த ஐஸ்வர்யா, அங்கிருந்து நான் படித்துக் கொண்டிருந்த கல்லூரியில் வந்து சேர்ந்தார்.

அவரின் அழகைப் பார்த்து வியந்திருந்த KC கல்லூரி மாணவர்கள், ஐஸ்வர்யாவைப் பார்ப்பதற்காகவே எங்களின் கல்லூரி வாசலின் முன்பு கூடுவார்கள்.

வழக்கமாக Khar ரயில் நிலையத்திலிருந்து ஐஸ்வர்யா, கல்லூரிக்கு ரயிலில் வருவார். ஆனால், நாங்கள் தோழிகள் ஆன பின்பு என்னுடன் நடந்தே கல்லூரி வந்தார்.

அப்போது, Churchgate வழியாக செல்லும்போது அங்கிருக்கும் இளைஞர்களும், இளம்பெண்களும் நின்று அவரை வியந்து பார்ப்பார்கள். ஐஸ்வர்யா, அவ்வளவு அழகாக இருப்பார்.

ஐஸ்வர்யாவுக்கு என பெரிய நட்பு வட்டம் இருந்தது. அவர்கள் எப்போதும் வகுப்புக்கு கடைசி நேரத்தில் தான் வருவார்கள். மேலும், கடைசி வரிசையில் தான் வகுப்பில் அமருவார்கள்.

ஆனால், இயற்பியல் வகுப்பில் மட்டும் முதல் வரிசைக்கு வந்துவிடுவார்கள். ஏனெனில், அந்த பேராசியர் மிகவும் கண்டிப்பானவர். எனினும், ஐஸ்வர்யா ஒவ்வொரு பேராசியருக்கும் பிடித்தமான மாணவியாக இருந்தார்.

மேலும், இயற்பியல் பேராசிரியர் அவரை, கல்லூரியின் மாத இதழுக்கு மாடலாக Pose கொடுக்க ஊக்குவித்தார்.

இவ்வளவு சுட்டித்தனங்கள் இருந்தாலும், ஐஸ்வர்யா ராய் படிப்பில் நல்ல கவனம் செலுத்துவார். மிகவும் தன்னடக்கம் உடையவர்.

கல்லூரியில் எல்லோரும், ஐஸ்வர்யாவை மிகவும் அழகானவள் என்று கூறுவார்கள். ஆனால், அதன் பிறகு உலகமே அவரை அழகானவள் என்று கொண்டாடியது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்