தொகுப்பாளினியின் மோசமான விமர்சனம்: ரசிகர்களுக்கு நடிகர் சூர்யாவின் வேண்டுகோள்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துக் கொள்ள வேண்டாம் என்று நடிகர் சூர்யா தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இரு பெண் தொகுப்பாளர்கள் நடிகர் சூர்யாவை மறைமுகமாக கிண்டல் செய்த வீடியோ சமீபத்தில் வைரலானது.

இதற்கு திரையுலகினர் பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், தொலைக்காட்சி நிர்வாகமும், தொகுப்பாளர்களும் மன்னிப்பு கேட்க வேண்டும் என சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வசைபாடினர்.

இதுகுறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துக் கொள்ள வேண்டாம்.

உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள், சமூகம் பயன் பெற’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்