பிரபாஸ் எனது காதலரா? அனுஷ்காவின் பதில் இதோ

Report Print Kabilan in பொழுதுபோக்கு
167Shares
167Shares
ibctamil.com

நடிகை அனுஷ்காவும், நடிகர் பிரபாஸூம் காதலர்கள் என்ற செய்தி பரவி வந்த நிலையில் பிரபாஸ் என் நண்பர் மட்டுமே என்று அனுஷ்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நடிகை அனுஷ்கா தற்போது நடித்துள்ள பாகமதி என்னும் படத்தின் பிரமோஷனுக்காக சென்னை வந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அனுஷ்கா, பாகமதி, முற்றிலும் வித்தியாசமான, புதுமையான கதையம்சம் உள்ள படம். இந்த படத்தில் சஞ்சனா என்ற பெயரில் IAS அதிகாரியாக நடித்துள்ளேன்.

என்னைப் பற்றி வரும் திருமண வதந்திகள் எல்லாம் பொய்யானது, நேரம் வரும் போது எனது திருமணம் நடக்கும், எனக்கு ஏற்ற ஒருவரை பார்க்கும் போது அவரை திருமணம் செய்து கொள்வேன்.

நிச்சயமாக பிரபாஸ் என் நண்பர் மட்டுமே, மற்றபடி எங்களுக்குள் வேறு எதுவும் இல்லை. இப்போதைக்கு நிறைய படங்கள் நடிக்க வேண்டும், பிறகு தான் திருமணம் என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்