பாழடைந்த வீட்டில் கொல்லங்குடி கருப்பாயி: வறுமையில் தவிப்பதாக கண்ணீர் பேட்டி

Report Print Santhan in பொழுதுபோக்கு

ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புறப் பாடல்களை பாடிய பாடகி தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ள வீட்டில் வசித்து வருவதால், அவர் பெரிதும் சிரமத்திற்குள்ளாகியுள்ளார்.

தமிழகத்தின் சிவங்கங்கை மாவட்டம் கொல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பாயி (80), நாட்டுப்புறப்பாடல்கள் பாடுவது, திரைப்படத்தில் பாடல்கள் பாடுவது என ஒரு காலத்தில் புகழ்பெற்ற கலைஞராக இருந்தார்.

கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்.

ஆனால் தற்போது நாட்டுப்புறப் பாடல்களை பாடுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதால், பெரிதும் சிரமத்திற்குள்ளாகியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு காலத்தில் புகழ்பெற்ற பாடகியாக இருந்தேன், தற்போது அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதே பெரிய சிரமமாக உள்ளது.

இப்போது கூட பலரும் என்னை வந்து பார்க்கின்றனர், என்னுடைய ஏழ்மையை நினைத்து ஆச்சரியப்படுகிறார்கள். இருந்த போதிலும் நான் யாரிடமும் உதவி கேட்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன்.

நான் இருக்கும் வீடு இடிந்து விழும் நிலையில் உள்ளதால் வீட்டை சரிபடுத்துவதற்கு நிதி தேவைப்படுவதாக கூறியுள்ளார்.

நலிந்த கலைஞர்களுக்கு நடிகர் சங்கம் அளிக்கும் மாதாந்திர உதவித்தொகையான 4,000 ரூபாய் கிடைப்பதாகவும், இருந்த போதிலும் மருத்துவச் செலவு போன்றவைகள் இருப்பதால், அந்த பணம் அன்றாட செலவிற்கே சரியாகி விடுகிறது.

கணவர் இறந்து பத்து ஆண்டுகள் கழிந்துவிட்டன, குழந்தைகளும் இல்லை, வெளியூர் பயணம் ஏதாவது செல்லவிருந்தால் உறவுப்பெண் ஒருவரை உடன் அழைத்துச் செல்வேன்.

இப்போது திருவிழாக்களில் நாட்டுப்புறப் பாடல்கள் பாடும் நிகழ்ச்சிகள் குறைந்துவிட்டதால், வருமானம் ஏதுமின்றி தவிப்பதாக வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்