குடிபோதையில் அப்ரிடியிடம் காதலை தெரிவித்த நடிகை: வைரலாகும் வீடியோ

Report Print Kabilan in பொழுதுபோக்கு

பாகிஸ்தானிய நடிகை ஆர்ஷி கான் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடிக்கு, தனது காதலை தெரிவிக்குமாறு பாடல் ஒன்றைப் பாடி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தானிய நடிகை ஆர்ஷி கான் சமீபத்தில் பிக்பாஸ் 11 சீசனில் இருந்து வெளியேறினார்.

இவருக்கும், பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடிக்கும் காதல் இருப்பதாக செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன.

இந்நிலையில் ஆர்ஷிகான் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் குடிபோதையில் பாடல் பாடுகிறார்.

அதன் மூலமாக அப்ரிடியை காதலிப்பதாகவும், தன் காதலை ஏற்றுக் கொள்ளுமாறும் கேட்டுள்ளார். இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்