பாடகி சித்ராவுக்கு விருது

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு

சின்னக்குயில் சித்ராவுக்கு கேரள அரசின் ஹரிவராசனம் விருது வழங்கப்படவுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு முதல் கேரள அரசின் சார்பில் சிறந்த பாடகர்களுக்கான ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டு வருகிறது.

2016- 2017ம் ஆண்டுக்கான விருதுக்கு பாடகி சித்ரா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜனவரி 14ம் திகதி சபரிமலையில் நடைபெறவிருக்கும் மகரவிளக்குப் பூஜையின்போது நடைபெறும் விழாவில் இவ்விருது வழங்கப்படவுள்ளது, அத்துடன் ரூ.1 லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்படும்.

இதற்கு முன்பாக சித்ரா ஆறு முறை இந்தியத் தேசிய திரைப்பட விருதுகளையும், ஆறு முறை தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளையும் மற்றும் பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்