வசிப்பதற்கு வீடு இன்றி தவித்த கமலின் முன்னாள் மனைவி

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

மும்பையில் வசிப்பதற்கு வீடு இன்றி தவித்து வந்த கமல்ஹாசனின் முன்னாள் மனைவி சரிகாவுக்கு நடிகர் அமீர்கான் உதவி செய்துள்ளார்.

கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற சரிகா நீண்டகாலமாக மும்பையில் தாயார் வீட்டில் வசித்து வந்தார்.

சமீபத்தில், தாயார் மறைவிற்கு பிறகு அவரது சொத்துக்கள் குடும்ப நண்பர் டாக்டர் விக்ரம் தாகூர் என்பவருக்கு சென்றுவிட்டது.

இதனால், வசிப்பதற்கு வீடு இன்றி தவித்து வந்த சரிகாவுக்கு, நடிகர் அமீர் கான் உதவி செய்துள்ளார். அமீன்கானின் தங்கையும், சரிகாவும் நெருங்கிய தோழிகள் ஆவார்.

கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், தாய், தந்தையை பிரிந்து மும்பையில் தனியாக அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். 2வது மகள் அக்‌ஷரா ஹாசன் சென்னையில் தந்தை கமலுடன் தங்கி இருக்கிறார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்