அதிக சம்பளம் வாங்கிய ஸ்டார் நடிகை: கேட்டா ஆச்சர்யப்படுவீங்க

Report Print Raana in பொழுதுபோக்கு

இப்போதெல்லாம் சானல்களுக்கு நடுவே ரேட்டிங் பிடிப்பதில் கடும் போட்டி. சீரியல், டிவி ஷோக்கள் என சினிமா போல கோடிகள் விளையாட தொடங்கிவிட்டது.

அதிலும் பொழுதுபோக்கு ரியாலிட்டி ஷோக்கள் பற்றி சொல்லவே வேண்டாம். லைவ்வாக நீங்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறீர்கள்.

இதில் பாலிவுட் சினிமாவை சேர்ந்த பிரபல நடிகை ரவீனா ட்ண்டான். 90 களில் அறிமுகமான இவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் ஹிந்தி சானல்களில் வரும் சில நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்துள்ளார்.

2017 ல் Sabse Bada Kalakar நிகழ்ச்சியின் நடுவராக இருந்தார். இதில் ஒரு EPISODE (பகுதி) க்கு ரூ 1.25 கோடி வாங்கியிருக்கிறார். இதன் மூலம் டிவி வழியாக அதிக சம்பளம் வாங்கும் பாலிவுட் நடிகை என இடம் பிடித்துள்ளார்.

மேலும் ரூ 1 கோடி சம்பளம் வாங்கி வந்த பிரபல நடிகைகளான ஷில்பா ஷெட்டி, மாதுரி தீக்‌ஷித் போன்றவர்களை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

தற்போது பியூட்டி டாக்கிஸ் என புதிதாக ஆரம்பித்து அதன் அழகு குறிப்புகளை வீடியோ மூலம் கூறிவருகிறாராம். இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்