எய்ட்ஸ் நோயை விட இது மிகவும் மோசமானது: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்

Report Print Santhan in பொழுதுபோக்கு
421Shares

திரைப்பட நடிகையும், சொல்வதெல்லாம உண்மை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவருமான லட்சுமி ராமகிருஷ்ணன், பிராமணச் சமூகத்தில் பிறந்து தமிழ்நாட்டில் வாழ்வது என்பது எய்டஸ் நோயை விட மிகவும் மோசமானது என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான திரைப்படம் அருவி, இப்படம் தமிழ் ரசிகர்களின் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இப்படத்தில் சொல்லவதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை கிண்டல் அடிப்பது மற்றும் விமர்சனங்கள் செய்வது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கு லட்சுமி ராமா கிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில், ஒரு பெண்ணாக, அதுவும் வெளிப்படையாகப் பேசுபவராக, ஊடகத்தில் உள்ளவராக, ஓரளவு வெற்றியடைந்தவராக, பிராமணச் சமூகத்தில் பிறந்து, அதிலும் பாலக்காடு ஐயர் உச்சரிப்பு கொண்டவராகத் தமிழ்நாட்டில் வாழ்வதென்பது ஹெச்.ஐ.வியால் பாதிப்படைவதை விடவும் மோசமானது.

இந்த வைரஸ் குறித்து யாராவது ஏன் படம் எடுக்கக் கூடாது? இதுபோன்று பெண்களை இழிவுபடுத்துவர்களை ஏன் கடத்தக்கூடாது என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்