ராஜினாமாவை வாபஸ் பெற்றார் நடிகர் பொன்வண்ணன்

Report Print Subash in பொழுதுபோக்கு

நடிகர் பொன்வண்ணன் இரண்டு தினங்களுக்கு முன்பு தனது நடிகர் சங்க துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

விஷாலின் செயல் பிடிக்காமல் தான் ராஜினாமா செய்தார் என்று பரவலாக பேசப்பட்டாலும் அவர் வாய்திறக்கவில்லை.

இந்நிலையில் இன்று திடீரென்று தனது ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்று மீண்டும் பதவியில் அமர்ந்துள்ளார்.

இது பற்றி இன்று பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், விஷால் கடந்த 6ம் தேதி ஆர் கே நகர் தொகுதியில் போட்டியிடுவதை அறிந்த நாசர், கார்த்தி உட்பட அதிர்ச்சி அடைந்தோம்.

எங்களுக்கு இந்த விஷயம் பற்றி தெரியாது, நடிகர் சங்கம் அரசியல் சார்பற்ற பணிகளாக இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்.

அதன் பின் விஷால் என்னை தொடர்பு கொண்டு " நான் நல்லது செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் தான் தேர்தலில் போட்டியிட நினைத்தேன்.

ஆனால் இவ்வளவு பிரச்சனை வரும் என்று எதிர்பார்க்கவில்லை, இனிமேல் இது போல் நடக்காது என்று என்னிடம் வருத்தம் தெரிவித்தார்.

சங்கத்தின் நலனை கருதி மீண்டும் எனது பணியை தொடரவுள்ளேன், மலேசியா வில் நடைபெறவுள்ள நட்சத்திர கலைவிழா பணிகள் நடந்து வருகிறது என்று குறிப்பிட்டார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்