டிவி நிகழ்ச்சியில் தயாரிப்பாளருடன் சண்டையிட்ட நடிகை ரோஜா

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு

TV9 தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தின்போது நடிகை ரோஜா, தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பானது.

TV9 தொலைக்காட்சியில் வாரிசு அரசியல் பற்றிய விவாத நிகழ்ச்சி நடந்தது, நடிகர் பவன்கல்யாண் அரசியல் தலைவராக தகுதியானவரா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இவருக்கு ஆதரவாக தெலுங்கு பட தயாரிப்பாளர் பந்த்லா கணேஷ் பேசினார், அப்போது நடிகை ரோஜாவிடம் கேட்கப்பட்ட போது, அவன், இவன் என பேசியுள்ளார்.

உடனே தயாரிப்பாளர் மரியாதையாக பேசும்படி கூறியதுடன், நீங்கள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸில் சேர்ந்த ராசி தான் ராஜசேகர ரெட்டி இறந்துவிட்டார்.

அதே கட்சியில் தொடர்ந்து இருங்கள், உங்கள் ராசி பற்றி நாட்டுக்கே தெரியும் என்று கூற கடுப்பாகிப் போன ரோஜா உன் பல்லை உடைப்பேன் என கூறியுள்ளார்.

பதிலுக்கு கணேசும் பல்லை உடைப்பேன் என கூற பரபரப்பானது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்