அரை நிர்வாண கோலத்தில் பிணமாகக் கிடந்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு

மும்பையில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பின் 2வது மாடியில் பிணமாக தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்தவர் அர்பிதா திவாரி(24). பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினியான அவர் அண்மையில் தனது காதலர் பங்கஜ் ஜாதவுடன் சேர்ந்து விளம்பர நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார்.

சம்பவத்தன்று அர்பிதா தனது காதலருடன் சேர்ந்து மானவ்ஸ்தல் ஹைட்ஸ் என்ற 19 அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றுள்ளார்.

அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நண்பரை சந்திக்க அதிகாலை 3 மணிக்கு அர்பிதாவும், ஜாதவும் சென்றுள்ளார். அவர்களின் நண்பர் 15வது மாடியில் வசித்து வருகிறார். இதனிடையே குறித்த குடியிருப்பில் நடந்த பார்ட்டிக்கு பின்னர் அதிகாலை 4 மணிக்கு அனைவரும் தூங்கியுள்ளனர்.

ஆனால் காலை 7 மணிக்கு எழுந்த ஜாதவ் பாத்ரூமுக்கு சென்றபோது அது உள்புறமாக பூட்டியிருந்ததால் அவர் மீண்டும் வந்து படுத்து தூங்கிவிட்டார்.

மீண்டும் எழுந்து வந்தபோதும் பாத்ரூம் பூட்டியிருந்ததால் சாவி போட்டு திறந்து பார்த்துள்ளனர். பாத்ரூம் ஜன்னலின் கண்ணாடியை எடுத்து தரையில் வைத்திருந்ததையும் இருவரும் கவனித்துள்ளனர். மேலும் அர்பிதாவை வீட்டில் காணாமல் இருவரும் தேடியுள்ளனர்.

இதனிடையே அர்பிதா 2வது மாடியின் குழாயில் பிணமாகத் தொங்கியது தெரிய வந்தது. அவர் உள்ளாடையுடன் அரை நிர்வாணமாக கிடந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து மது போத்த்ல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அவர் தானாக குதித்தாரா, தவறி விழுந்தாரா என்பது தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பில் இதுவரை யாரையும் பொலிசார் கைது செய்யவில்லை என தெரிய வந்துள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்