கார் விபத்தில் சிக்கிய கவுதம் மேனன் உருக்கமான டுவிட்

Report Print Santhan in பொழுதுபோக்கு
212Shares

பிரபல திரைப்பட இயக்குநரான கவுதம் மேனன், கார் விபத்தின் போது என் வாழ்வை திருப்பிய நொடிகள் அவை என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனரான கவுதம் வாசுதேவ் மேனன் நேற்று மாமல்லபுரத்தில் இருந்து தனது சொகுசு காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது சோழிங்கநல்லூர் ஆவின் பால்பண்ணை அருகே செல்லும்போது, சாலையில் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது கவுதம் வாசுதேவ் மேனன் சென்ற கார் எதிர்பாரதவிதமாக மோதியதால், காரின் முன்பாகம் நொறுங்கியது.

இந்த விபத்தில் சிக்கிய கவுதம் மேனன், உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிகப்பட்டார். அங்கு அவருக்கு கையில் மட்டுமே லேசான அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கவுதம் மேனன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், என் நலன் விரும்பிய , நலம்பெற வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி, வாழ்வைத் திருப்பிய நொடிகள் அவை. இப்போது நலமாக இருக்கிறேன். எச்.சி.எல் நிறுவனத்தில் பணிபுரியும் கோபாலகிருஷ்ணன் செய்த உதவியால் மனிதாபிமானத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டேன். மீண்டும் படப்பிடிப்பு தொடங்க காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்