விபத்தில் சிக்கிய இயக்குனர் கவுதம் மேனன்: அப்பளம் போல் நொறுங்கிய கார்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
307Shares
307Shares
ibctamil.com

கவுதம் மேனனின் சொகுசு கார் விபத்துக்குள்ளானதில் அவர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

தமிழ்த் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனரான கவுதம் வாசுதேவ் மேனன் மாமல்லபுரத்தில் இருந்து தனது சொகுசு காரில் சென்னை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார்.

செம்மஞ்சேரி அருகில் வந்தபோது அவரது கார் லொறி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் இயக்குநர் கவுதம் மேனன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

சம்பவம் குறித்து கிண்டி பகுதி பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் திரையுலகினர் மத்தியில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்