அசோக்கிற்கு சாக வேண்டிய வயதா? இதை விட பரிதாபமான பிறவி இல்லை என நடிகை கவலை

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகையான கவுதமி தயாரிப்பாளரை விட பரிதாபமான பிறவி இல்லை என கூறியுள்ளார்.

நடிகையான கவுதமி டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் அவ்வப்போது தனது கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், கஸ்தூரி கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் இணை தயாரிப்பாளர் அசோக்கின் அகால மரண செய்தி கேட்டு ஒரு கணம் விக்கித்து போனேன். எந்த காரணமாகவும் இருக்கட்டுமே. வாழ்வை துறக்க வேண்டிய வயதா அவருக்கு

அசோக்கை எனக்கு பரிச்சயம் உண்டு. நான் திரைப்படங்களின் வெளிநாட்டு உரிமை வாங்க தொடங்கியிருந்த காலம் அது. பசங்க படத்துக்காக முதன்முதலில் சந்தித்தபோதே, தெளிவான தொலைநோக்குப் பார்வையில், வியாபார முதிர்ச்சியில், என்னை கவர்ந்தவர். அவருடைய முடிவை நான் எதிர்பார்க்கவில்லை. நம்ப முடியவில்லை.

கந்து வட்டி கொடுமை கீழ்த்தட்டு மக்களின் உயிரை குடிக்கும் என்றுதானே நினைத்திருந்தோம்.

எந்த மட்டத்திலும், யாரும் தப்ப முடியாது என்று மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது. நான், ஜீ.வி.பிலிம்சில் 6 வருடம் பணியாற்றியவள். 3 படங்களை தயாரித்தவள். அனுபவத்தில் சொல்கிறேன். தமிழ் திரைப்பட தயாரிப்பாளனை விட, பரிதாபமான பிறவி இல்லை.


மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்