எளிமையாக நடந்தது நமீதா- வீரேந்திர சவுத்ரி திருமணம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

திருப்பதியில் உள்ள இஸ்கான் தாமரை கோவிலில் நடிகை நமீதா அவரது காதலர் வீரேந்திர சவுத்ரியை இன்று (நவ. 24) காலை 5.30 மணிக்கு திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2003-ல் தமிழ்திரைப்பட உலகில் அறிமுகமானவர் நடிகை நமீதா. கவர்ச்சி வேடங்களில் கலக்கிய நமீதா சினிமா வாய்ப்பு குறைந்த நிலையில் சமீபத்தில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதையடுத்து, தனது நீண்ட நாள் காதலர் வீரேந்திர செளத்ரியை திருமணம் செய்யவுள்ளதாக சமூகவலைதளம் வாயிலாக நமீதா சமீபத்தில் அறிவித்தார்.

அதனை தொடர்ந்து திருப்பதியில் உள்ள நட்சத்திர விடுதியில் இருவருக்கும் நிச்சயம் நடைப்பெற்றது.

இந்நிலையில் திருப்பதி இஸ்கான் கிருஷ்ணர் கோவிலில் இன்று காலை நமீதாவுக்கும், வீரேந்திர சவுத்திரிக்கும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். சினிமா பிரபலங்களான நடிகர் சரத்குமாரும் அவர் மனைவி ராதிகாவும் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்