கண்ணீர் சிந்திய ஐஸ்வர்யா ராய்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் இறந்து போன தனது தந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது புகைப்படக்கலைஞர்களை கண்டித்ததோடு மட்டுமல்லாமல் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தியுள்ளார்.

ஐஸ்வர்யாவின் தந்தை கிருஷ்ணா சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துபோனார்.

தனது தந்தை உயிரோடு இருக்கும்போது அவரது பிறந்தநாளை அனாதை குழந்தைகளுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கம்.

தற்போது, தந்தை உயிரோடு இல்லாத காரணத்தால், அவரது பிறந்தநாளை முன்னிட்டு அன்னப்பிளவுடன் பிறந்த 100 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய உதவியுள்ளார்.

இதற்காக SMILE Foundation - க்கு தனது அம்மா மற்றும் மகள் ஆரத்யாவுடன் சென்று அங்கு அனாதை குழந்தைகளை சந்தித்து கேட் வெட்டியுள்ளார்.

இதன்போது, புகைப்படக்கலைஞர்களை ஐஸ்வர்யாவின் குடும்பத்தினரை தொடர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டே இருந்தனர், இது ஐஸ்வர்யாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், புகைப்படக்கலைஞர்களை பார்த்து, தயவு செய்து நிறுத்துங்கள், இது ஒன்று பொது நிகழ்ச்சி கிடையாது, எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் என்று கூறியுள்ளார்.

இருப்பினும் புகைப்படக்கலைர்கள் அதனை கேட்காமல் புகைப்படம் எடுத்துக்கொண்டே இருந்தனர், இதனைப்பார்த்து உணர்ச்சிவசப்பட்ட ஐஸ்வர்யா உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் சிந்தியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்