தனி மனிஷியாக போராடினேன், யாரும் உதவலையே: நடிகை சுலோச்சனா ஓபன் டாக்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகையான சுலோச்சனா நான் கஷ்டப்பட்ட காலங்களில் தனக்கு உதவ யாரும் முன்வரவில்லை என்று கூறியுள்ளார்.

பிரபல திரைப்பட நடிகையான சுலோச்சனா தூறல் நின்னுபோச்சு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

சமீபத்தில் பிரபல நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர், தான் நடித்த தூறல் நின்னு போச்சு படம் நல்ல படியாக சென்றதால், அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்தன.

அப்போது தொடர்ந்து பிஸியாக இருந்தேன், 12-ஆம் வகுப்பு முடித்தவுடனே எனக்கு திருமணம் செய்து வைத்துவிட்டனர்.

இதே நடிப்புத் துறையில இருக்கிற கோபி கிருஷ்ணனுக்கும் எனக்கும் தான் கல்யாணம் நடைபெற்றது.

அதன் பின் எனக்கும், கோபி கிருஷ்ணனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இதையடுத்து எனது இரண்டு மகன்களையும் நான் தனி ஆளாக வளர்த்து வந்தேன். நான் கஷ்டத்தில் இருக்கும் காலத்தில் எனக்கு யாரும் பெரிதாக உதவ முன் வரவில்லை.

முன்பின் தெரியாதவர்கள் உதவின அளவுக்குக் கூட, நெருங்கிய சொந்தங்கள் உதவவில்லை, ஒரு சிங்கிள் பேரண்டா தான், என் பிள்ளைகளை வளர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அவர்களுக்கு விவரம் தெரிந்து வளரும் வரைக்கும் பக்கத்தில் இருந்து பார்த்துக்க வேண்டியிருந்தது, இதன் காரணமாகவே இடையில் என்னால் நடிக்க முடியவில்லை.

தொடர்ந்து சீரியல்கள் என்னைத் தேடி வந்தன. அப்போது என் பிள்ளைகள் சென்று நடிங்கள் என்று கூறினார்கள், அதன் பின் நம்ம துறை தானே என்று, மீண்டும் சீரியலில் அடி எடுத்து வைத்தேன்.

தனி மனிஷனாக போராடினாலும் தற்போது என் மகன்கள் இருவரும் நல்ல நிலையில் உள்ளனர், பெரிய மகனுக்கு திருமணம் முடிந்துவிட்டது.

அனைவரும் கூறுவார்கள், சிங்கிள் பேரண்டா இருந்தா கண்டிப்பா பசங்க படிக்கமாட்டாங்கள் என்று, ஆனால், நான் அப்படியில்லாமல் என்னால் முடிந்த அளவிற்கு நல்ல படிப்பை என் பசங்களுக்குக் கொடுத்திருக்கேன்.

இத்தனை ஆண்டுகளாக நான் பட்ட கஷ்டத்திற்கு அவர்கள் நல்லா இருக்காங்கனா அதுவே பெரிய விஷயம்தானே என்று கூறி முடித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்