ஆண்களுக்கும் பாலியல் தொல்லை: பிரபல நடிகை பரபரப்பு கருத்து

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு

சினிமா உலகில் ஆண்களும் பாலியல் தொல்லைக்கு ஆளாகுகிறார்கள் என பரபரப்பை கிளப்பியுள்ளார் ராதிகா ஆப்தே.

கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே, அவ்வப்போது அதிரடி கருத்துகளை கூறி சர்ச்சையில் சிக்குவார்.

மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த ராதிகா, திரைத்துறையில் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

அதைப்பற்றி வெளியே சொல்ல தயங்குகிறார்கள், குற்றவாளி சமூகத்தில் பெரிய ஆளாக இருப்பன் புகார் கவனிக்கப்படாமல் போய்விடும், கலைஞர்களின் கனவை சிதைத்துவிடும்.

ஆனாலும் அதைப்பற்றி பேச வேண்டும், இதுவே சரியான தருணம், அதிகாரத்தின் மூலம் மற்றவர்களை ஆக்கிரமிப்பவர்கள் பற்றி வெளிப்படையாக பேச வேண்டும் என தெரிவித்துள்ளார்

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்