ஏற்கனவே திருமணமான பெண்களை மணந்த பிரபல முன்னணி நடிகர்கள் இவர்கள் தான்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

சினிமா உலகில் மறுமணம் செய்து கொள்வது என்பது அதிகம் நடக்கும் விடயம் தான். அப்படி ஏற்கனவே திருமணமான பெண்களை மணந்த பிரபல நடிகர்கள் குறித்து பார்ப்போம்.

எம்.ஜி.ஆர் - ஜானகி

ஜானகி திரையுலகில் நுழைந்த ஆரம்பத்திலேயே நடிகரும் ஒப்பனையாளருமான கண்பதி பட் என்ற கன்னட கலைஞரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

அப்போது ராஜ முக்தி என்ற படத்தில் ஜானகி நடித்த போது எம்.ஜி.ஆர் இரண்டாவது நாயகனாக நடித்தார்.

அப்போது இருவருக்குள்ளும் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. பின்னர் 1950-ல் இருவரும் காதலிக்க தொடங்கினார்கள்.

ஏற்கனவே இருமுறை திருமணமான எம்.ஜி.ஆர் இரண்டு மனைவிகளின் மறைவுக்கு பிறகு 1962-ல் ஜானகியை திருமணம் செய்து கொண்டார்.

சரத்குமார் - ராதிகா

சரத்குமார் திருமணம் செய்துக் கொண்ட ராதிகா ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆனவர். சரத்குமாருக்கும் ராதிகா இரண்டாவது மனைவி ஆவார்.

இருவரும் கடந்த 2001-ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் திகதி திருமணம் செய்து கொண்டார்கள்.

பிரசாந்த் - கிரகலட்சுமி

நடிகர் பிரசாந்த் கிரகலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்தார். திருமணமான சில மாதங்களிலேயே கிரகலட்சுமி ஏற்கனவே திருமணமானவர் என்ற உண்மை பிரசாந்துக்கு தெரியவந்தது.

இதையடுத்து பிரசாந்த் நீதிமன்றத்தில் வழக்கு தொடர அவர்களுக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.

சஞ்சய் தத் - மான்யதா

சஞ்சய் தத்தின் மனைவி மான்யதா ஏற்கனவே மிராஜ் உர் ரெஹ்மான் ஷேக் என்பவரை திருமணம் செய்திருந்தார்.

இந்நிலையில், சஞ்சய் மான்யதாவை திருமணம் செய்த போது தங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை என மிராஜ் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் சஞ்சய் தத் - மான்யதாவின் திருமணம் செல்லும் தீர்ப்பு வழங்கியது.

அனுபம் கெர் - கிரோன் கெர்

கிரோன் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கௌதம் பெரி என்பவரை திருமணம் செய்து கொண்டு 1985ல் பிரிந்தவர். இதையடுத்து தனது பாலிய நண்பரான நடிகர் அனுபம் கெரை கிரோன் இரண்டாவதாக மணந்தார்.

ராகுல் ராய் - ராஜலட்சுமி

சமீர் சோனியை விவாகரத்து செய்த பிறகு ராஜலக்ஷ்மி நடிகர் ராகுல் ராயை இரண்டாவதாக திருமணம் செய்தார். இருவருக்கும் 2000-ம் ஆண்டு திருமணம் ஆன நிலையில், 2014-ல் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...