ஹொட்டலில் சண்டைபோட்ட நடிகர் கருணாஸ்: வெளியேறிய அனிருத்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

சென்னையில் உள்ள பிரபல ஹொட்டலில் நடிகர் கருணாஸின் ஆதரவாளர்கள் தொழிலதிபர் ஒருவரை தாக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

பிரபல ஹொட்டலுக்கு சென்ற நடிகர் கருணாஸ் அங்கு தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது, ஏற்பட்ட பிரச்சனையில் இவரது ஆதரவாளர்கள் தொழிலதிபர் ஒருவரை கீழே போட்டு அடித்துள்ளனர்.

இந்த சம்பவம் நடைபெற்ற போது இசையமைப்பாளர் அனிருத்தும் தனது நண்பர்களுடன் இருந்துள்ளார்.

சண்டை தொடங்கிய சிறிது நேரத்தில் அனிருத் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றுள்ளார். இந்த அனைத்து காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...