ஜோதிகாவை ஆபாசமாக பேசவைத்து விளம்பரம் தேடும் பாலா

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

நடிகை ஜோதிகாவை ஆபாசமாக பேசவைத்து இயக்குநர் பாலா விளம்பரம் தேடிக்கொள்கிறார் என இந்திய ஜனநாயக மாதர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

பாலாவின் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் நாச்சியார் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

இதில், நடிகை ஜோதிகா "தே" என்று தொடங்கும் கெட்டவார்த்தையை பேசியிருப்பார். இதற்கு மாதர்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூறியதாவது, இந்த வார்த்தை பெண்ணை இழிவுபடுத்தும் வார்த்தை, யதார்த்தம் என்ற பெயரில் இதனை ஏற்கமுடியாது,

குறைந்தபட்சம் முழு படத்தை பார்க்கும்போதாவது எந்த பின்புலத்தில் காட்சி அமைகிறது என்று புரிந்துகொள்ளமுடியும்.

ஆனால், டீசரில் இதனை இணைக்க வேண்டிய அவசியம் என்ன? ஜோதிகாவை சொல்ல வைத்து விளம்பரம் தேடிக்கொள்கிறார் பாலா.

யதார்த்தத்தை காட்டுவது மட்டுமல்ல மாற்றுவதும் சினிமாவின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று மாதர் சங்கத்தின் துணை தலைவர் வாசுகி கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...